தேசியம்
செய்திகள்

அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்

மத்திய அரசின் அவசர காலச் சட்ட பயன்பாடு குறித்த ஆணையத்தின் பொது விசாரணைகள் வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது.

கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை உபயோகித்தது.

1988 இல் சட்டமாக மாறிய பின்னர் முதல் முறையாக அவசர காலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை February 14ஆம் திகதி பிரதமர் Trudeau எடுத்தார்.

இந்த நிலையில் இந்த தேசிய விசாரணை மத்திய அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் 65 பேர் சாட்சியமளிக்க உள்ளனர்.

பிரதமர் Trudeau, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair உட்பட பல அமைச்சர்களும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் இந்த விசாரணையில் சாட்சியமளிக்க உள்ளனர்.

தவிரவும் RCMP ஆணையர் Brenda Lucki, Ottawa நகர முதல்வர் Jim Watson, Coutts – Alberta, Windsor – Ontario ஆகிய நகர முதல்வர்கள், முன்னாள் Ottawa காவல்துறை தலைவர் Peter Sloly ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.

அவசர காலச் சட்ட பயன்பாட்டின் அவசியத்தை Trudeau தொடர்ந்தும் நியாயப்படுத்துகின்றார்.

ஆனாலும் இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நியாயத்தன்மையை தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கவுள்ளதாக கனடிய சிவில் சுதந்திரத்திற்கான சங்கம் உறுதியளிக்கிறது.

Related posts

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan

Gordie Howe மேம்பாலம் இந்த வாரம் திறக்கப்படும்: Mark Carney

Lankathas Pathmanathan

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment