தேசியம்
செய்திகள்

Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி Scott Smith உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.
அவருடன் அவரது இயக்குநர்கள் குழுவும் பதவி விலகியுள்ளனர்.
புதிய தலைமைக்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதவி விலகல் அமைவதாக செவ்வாய்க்கிழமை (11) வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அடுத்த இயக்குநர்கள் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கும் வரை Hockey கனடாவை வழிநடத்த இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது.
December 17 நடைபெற உள்ள தேர்தலுக்கு பின்னர் புதிய இயக்குநர்கள் குழு நியமிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனடாவில் வியாழக்கிழமை 7,145  தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

Montreal நகர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – இருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment