தேசியம்
செய்திகள்

உக்ரைனில் நிகழும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Putin பொறுப்பு: உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட Trudeau தெரிவிப்பு

உக்ரைனில் நிகழும்  கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Vladimir Putin பொறுப்பு என்பது தெளிவாகிறது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

Trudeau ஞாயிற்றுக்கிழமை (08) உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அங்கு கனேடிய தூதரகத்தை மீண்டும் திறந்ததுடன், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyயையும் Trudeau சந்தித்தார்.

ரஷ்ய படையெடுப்புக்கு மத்தியில் மேற்கொண்ட இந்த பயணத்தின் போது உக்ரைனுக்கு கனடாவின் ஆதரவை பிரதமர் வெளிப்படுத்தினார்.

Zelenskyy உடன் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், கனடா உக்ரைனுக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்கும் என Trudeau  உறுதியளித்தார்.

Putinனின் நடவடிக்கைக்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

40 ரஷ்ய தனிநபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளையும் Trudeau அறிவித்தார்.

Kyivவில் உள்ள கனேடிய தூதரகத்தை மீண்டும் திறப்பதாகவும் Trudeau அறிவித்தார்.

இந்த பயணத்தில், Trudeauவுடன் துணைப் பிரதமர் Chrystia Freeland, வெளியுறவு அமைச்சர் Melanie Joly ஆகியோர் பயணித்தார்கள்.

Related posts

கனடாவின் முன்னாள் ஐ.நா. அதிகாரி சீனா சார்பில் உளவு பார்த்தார்?

Lankathas Pathmanathan

கனடாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சுவாச நோய்!

Lankathas Pathmanathan

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

Gaya Raja

Leave a Comment