தேசியம்
செய்திகள்

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

இலங்கையை தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திவாலான ஒரு நாடு என Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (04) இலங்கையின் 75வது சுதந்திர தினம் நிகழ்ந்தது.

இந்த தினம் குறித்து திங்கட்கிழமை (06) நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை நேரத்தில் ஹரி ஆனந்தசங்கரி உரை ஒன்றை ஆற்றினார்.

இலங்கைத்தீவு அதன் இராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நாடாக இருக்க வேண்டும் எனவும் ஹரி ஆனந்தசங்கரி தனது உரையில் கூறினார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா கடந்த மாதம் தடைகளை விதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

Lankathas Pathmanathan

40 மில்லியனை தாண்டிய கனடாவின் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Leave a Comment