September 29, 2026
தேசியம்
செய்திகள்

2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றது!

உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (27) Torontoவில் நடைபெற்ற Jamaica அணிக்கு எதிரான ஆட்டத்தில் கனடிய ஆண்கள் அணி 2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் கனடிய அணி Jamaica அணியை 4-0 என்ற goal கணக்கில் வெற்றி கொண்டது.

Costa Ricaவிற்கு எதிரான ஏமாற்றமான முடிவுக்குப் பின்னர், கனடிய ஆண்கள் தேசிய அணி Jamaicவை Torontoவில் உள்ள BMO திடலில்வெற்றி கொண்டு, 1986ஆம் ஆண்டின் பின்னர், முதல் முறையாக உலகக் கோப்பைக்கான வாய்ப்பைப் பெற்றது.

இதன் மூலம் 36 ஆண்டுகளில் கனடாவின் ஆண்கள் அணி, உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு தகுதி பெற்றது.

 

Related posts

ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் கருத்து

Lankathas Pathmanathan

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனடியர்கள் தெளிவாக இருக்க வேண்டும்: Trudeau

Gaya Raja

Leave a Comment