தேசியம்
செய்திகள்

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario மாகாணம்  அறிமுகப்படுத்துகிறது.

வியாழக்கிழமை (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Kieran Moore  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுமக்களுக்கு புதிய சோதனை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்திய அவர் COVID தனிமைப்படுத்தல்  காலத்தை சில தனிநபர்களுக்காக குறைப்பதாக கூறினார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக மாகாணம் குறைக்கிறது.

தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என Moore கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போடப்படாத அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் தொடர்ந்தும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிக ஆபத்துள்ள சுகாதாரப் பாதுகாப்பு இடங்களில்  பணிபுரியும் அல்லது வசிக்கும் நபர்கள் 10 நாட்களுக்கு வேலைக்குச் செல்லக் கூடாது எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை முதல் PCR சோதனைகள், தொற்றின் அறிகுறியுள்ள அதிக ஆபத்துள்ள நபர்கள், அதிக ஆபத்துள்ள இடங்களில் பணிபுரிபவர்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இலேசான தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட பொதுமக்கள் இப்போது பரிசோதனையை நாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது தங்கப் பதக்கம்

Lankathas Pathmanathan

விரைவில் Alberta மாகாண ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan

சர்ச்சைக்குரிய Greenbelt திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment