September 7, 2026
தேசியம்
செய்திகள்

Albertaவில் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளது: தலைமை மருத்துவர் எச்சரிக்கை

Albertaவில் COVID தொற்றின் ஐந்தாவது அலையின் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

குளிர் மாதங்களில் COVID குறித்து விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு மாகாணத்தின் தலைமை மருத்துவர் நினைவூட்டினார்.

தொற்றின் பருவநிலை காரணமாக ஐந்தாவது அலையைக் காணக்கூடிய ஆபத்து இருப்பதாகக் வைத்தியர் Deena Hinshaw கூறினார்.

COVID கடத்தும் ஆக்கிரமிப்பு தன்மையையும், குறிப்பாக Delta மாறுபாட்டைத் தணிக்க தேவையான நகர்வுகளை Alberta வாசிகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், வரும் மாதங்களில் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கவில்லை என Hinshaw ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

புதன்கிழமை Albertaவில் 412 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 3 மரணங்களும் பதிவாகின.

Related posts

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை மரணம் – ஒன்பது பேர் வரை காயம்

Lankathas Pathmanathan

எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதி கனடாவின் புதிய அமைச்சரவை பதவியேற்கும்!

Gaya Raja

Conservative நாடாளுமன்ற உறுப்பினரின் கட்சி மாறும் முடிவு “ஒரு துரோகம்”: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment