தேசியம்
செய்திகள்

COVID காரணமாக கனடாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள்!

COVID தொற்றின் காரணமாக கனடாவில் திங்கட்கிழமையுடன் 28 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

திங்கட்கிழமை மாத்திரம் 3,405 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

மீண்டும் Albertaவில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் திங்களன்று பதிவு செய்யப்பட்டன.

திங்கட்கிழமை 1,126 தொற்றுக்களையும் 21 மரணங்களையும் அதிகாரிகள் Albertaவில் பதிவு செய்தனர்

தவிரவும் வார விடுமுறையில் Albertaவில் 4,037 தொற்றுக்கள் பதிவாகின.

British Columbiaவில் திங்கட்கிழமை 662 தொற்றுக்களும் 10 மரணங்களும் பதிவாகின.

கடந்த மூன்று தினங்களில் British Columbiaவில் மொத்தம் 1,986 தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Ontarioவில் திங்கட்கிழமை 511 புதிய தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின.

Saskatchewanனில் 445 தொற்றுகளும் ஐந்து மரணங்களும் பதிவாகின.

Quebecகில் 402 தொற்றுகளும் ஆறு மரணங்களும் திங்கட்கிழமை பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் திங்களன்று தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

இந்த நிலையில் திங்கட்கிழமையுடன் 28,001 மரணங்கள் COVID காரணமாக கனடாவில் பதிவாகியுள்ளன.

Related posts

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில்

Lankathas Pathmanathan

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment