தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

கட்சி தலைவர்களின் அதிகாரப்பூர்வ விவாதங்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இந்த விவாதங்களை ஆர்வமுடன் அவதானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை கவர சிறந்த வாய்ப்பாக இந்த விவாதங்கள் நோக்கப்படுகின்றது.

புதன்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு மொழி விவாதத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Liberal தலைவர் Justin Trudeau, Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, பசுமை கட்சி தலைவி Annamie Paul ஆகியோர் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ள ஆங்கில மொழி விவாதத்திலும் பங்கேற்கின்றனர்.

கனடாவின் மக்கள் கட்சி தலைவர் Maxime Bernier இந்த விவாதங்களில் பங்கேற்பதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை.புதன்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு மொழி விவாதம் 8 மணிக்கு ஆரம்பமானது.

வியாழக்கிழமை ஆங்கில மொழி விவாதம் 9 மணிக்கு ஆரம்பமாகிறது.

Related posts

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

Lankathas Pathmanathan

Leave a Comment