November 10, 2024
தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

August மாதம் 12ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, Ontarioவின் நாளாந்த COVID  தொற்றின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

செவ்வாய்கிழமை சுகாதார அதிகாரிகள் Ontarioவில் 348 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். 10 புதிய மரணங்களும் அறிவிக்கப்பட்டன. இவற்றில் ஆறு மரணங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

COVID தொற்றுடன் 163 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தவிரவும் செவ்வாயன்று British Columbiaவில் 501, Albertaவில் 407, Quebecகில் 323, Saskatchewanனில் 107 என தொற்றுக்கள் பதிவாகின.  ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள் செவ்வாய்கிழமை பதிவாகின.

Related posts

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontarioவில் September மாதத்தின் பின்னர் குறைவான தொற்றுக்கள் பதிவு

Gaya Raja

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment