தேசியம்
செய்திகள்

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Nova Scotia மாகாணசபை தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆளும் Liberal கட்சியை தோற்கடித்து Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.

Progressive Conservative கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 55 ஆசனங்களை கொண்ட Nova Scotia மாகாண சபையில் பெரும்பான்மை அரசமைப்பதற்கு 28 ஆசனங்களை வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்கு முன்னர் Progressive Conservative கட்சி 17 ஆசனங்களை தன்வசம் கொண்டிருந்தது.

2009ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக Progressive Conservative கட்சி Nova Scotiaவில் ஆட்சியமைக்கின்றது. இந்த வெற்றியின் மூலம் Tim Houston Nova Scotiaவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

24 ஆசனங்களுடன் தேர்தலை எதிர்கொண்ட Liberal கட்சி இம்முறை 17 ஆசனங்களை மாத்திரமே வெற்றிபெற்றது. சுகாதாரம், போக்குவரத்து போன்ற அமைச்சர்கள் உட்பட Liberal கட்சியின்பல நீண்டகால அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். பெரும் தோல்வியைத் தழுவிய போதிலும், உடனடியாக பதவி விலகத் திட்டமிடவில்லை என Liberal கட்சியின் தலைவர் Iain Rankin கூறினார்.

Gary Burrill தலைமையிலான NDP 6 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னர் NDP 5 மாகாணசபை உறுப்பினர்களை தன்வசம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja

Quebecகில் காட்டுத் தீ 10 ஆயிரம் hectares பரப்பரவை பாதித்தது

Lankathas Pathmanathan

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment