தேசியம்
செய்திகள்

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

British Colombia மாகாணத்தின் உட்புறத்தில் உள்ள முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

British Colombiaவின் Cranbrook என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Lower Kootenay Band இந்த அறிவித்தலை வெளியிட்டது.

தரையை ஊடுருவும் radar கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டில்  Aq’am சமூகம் இந்த தேடலை நடத்தியதாக கூறப்படுகின்றது. 1912 முதல் 1970 வரை இந்த வதிவிட பாடசாலை இயங்கியுள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் British Colombiaவின் Kamloops நகரில் அமைந்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்களும், சில வாரங்களுக்கு பின்னர் Saskatchewanவின் முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 751 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்களும்  கண்டு பிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியது

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு புலம்பெயர் குழுக்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment