தேசியம்
செய்திகள்

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அங்கீகரித்த சட்டமூலத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் David McKinnonனை திங்கட்கிழமை சந்தித்திருந்தார்.

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற Bill 104 தனிநபர் சட்டமூலம் Ontario சட்டமன்றத்தில் நிறைவேறியது குறித்து இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை இந்தச் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்திற்கான Ontario ஆளுநரின் அங்கீகாரத்தை நிறுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டையும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

Related posts

அடுத்த கல்வியாண்டு திட்டங்களை அறிவித்த Ontario மாகாண அரசாங்கம்

Lankathas Pathmanathan

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment