கனடிய பிரதமரின் மனைவி நாடாளுமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டும் என Conservative கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் ‘பெருங்கடல் தூதராக’ பிரதமர் Mark Carney-யின் மனைவி Diana Fox Carney நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது பணிகள், பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றக் குழு முன் ஆஜராக வேண்டும் எனக் Conservative கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Diana Fox Carney தனது பணியின் நோக்கம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றச் சுற்றுச்சூழல் நிலைக்குழு முன் ஆஜராக கோரி தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக Conservative கட்சி அறிவித்துள்ளது.
அவரது முன்னுரிமைகள் என்ன, கொள்கைகளை வடிவமைப்பதில் அவருக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவரது பணியாளர்கள், பயணச் செலவுகளுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது என்பதை கனடியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த September மாதம், பிரதமர் Mark Carney அமைச்சரவை Diana Fox Carney-யை கனடாவின் ‘பெருங்கடல் தூதராக’ நியமித்தது.
பெருங்கடல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, பூர்வீகக் குடியினரின் தலைமைத்துவம், பொருளாதார மீள்தன்மை, கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பதவியின் ஒரு பகுதியாக அவர் ஏற்கனவே Iqaluit நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் Halifax நடைபெற உள்ள முக்கிய மாநாட்டிற்கும் அவர் தலைமை தாங்கவுள்ளார்.
இதற்கிடையே, Diana Fox Carney-யின் இந்தப் பதவி மத்திய அரசின் நெறிமுறை விதிகளுக்கு எந்த வகையிலும் முரணானது அல்ல எனப் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
