November 24, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் இராணுவத் தயார் நிலை குறித்து Pentagon பகிரங்க விமர்சனம்

கனடாவின் இராணுவ தயார் நிலை, பாதுகாப்பு செலவின முன்னுரிமைகள் குறித்து அமெரிக்கா மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

கனடா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய விமர்சனம் வெளியானது.

இராணுவத் திறனை விட உள்நாட்டு பொருளாதார, வணிக நலன்களுக்கு கனடா முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான Pentagon பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்க யுத்த அமைச்சகம் திங்கட்கிழமை (23) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு வெளியானது.

இந்த நிதி ஆண்டில் கனடிய விமானப்படையின் விமானங்களில் 41.9 சதவீதம் மட்டுமே போர் நடவடிக்கைகளுக்குத் தயார் நிலையில் உள்ளதாகவும், இது NORAD எனப்படும் வட அமெரிக்க வான் பாதுகாப்புக்குக் கனடா பங்களிக்கும் திறனை நேரடியாகப் பாதிப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தவிரவும் கனடியக் கடற்படையின் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதையும், தரைப்படை, கடற்படையின் தயார் நிலை மிகவும் குறைவாக இருப்பதையும் Pentagon விமர்சித்துள்ளது.

மேலும் அமெரிக்கத் தயாரிப்பான F-35 போர் விமானங்களை முழுமையாக கொள்வனவு செய்வதா என்பது குறித்து பிரதமர் Mark Carney அரசு மேற்கொண்டு வரும் மறு ஆய்வையும் Pentagon கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

இதன் மூலம் NORAD அமைப்பிற்கு மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமையை உருவாக்குகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2035-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற NATO இலக்கை அடைவதற்கான தெளிவான திட்டத்தைக் கனடா இன்னும் வகுக்கவில்லை எனவும், மிக முக்கிய நிதி ஒதுக்கீடுகளை 2029 பொதுத் தேர்தலுக்குப் பின்னரே தள்ளிப் போட்டுள்ளதாகவும் Pentagon குற்றம் சாட்டியுள்ளது.

Related posts

கனடாவின் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தை வேறு ஒரு கட்சி மாற்ற வேண்டும்: Preston Manning

Lankathas Pathmanathan

கனடிய விமான நிலையங்களில் சுங்கத் துறை முனையங்கள் முடக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment