November 19, 2026
தேசியம்
செய்திகள்

புதிய பொலிவுடன் Toronto நகர சபை: அடுத்த 4 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களை அறிவித்த Olivia Chow!

Toronto மாநகர சபையின் புதிய பதவி காலத்திற்கான முதலாவது அமர்வு புதன்கிழமை (18) நடைபெற்றது.

Toronto நகரத்தை “மேலும் அக்கறை உள்ளதாகவும், கட்டுப்படியாக கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும்” மாற்றுவதே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது முதன்மை இலக்கு என நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Olivia Chow, தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்களை தனது முதலாவது உரையில் முன்வைத்தார்.

அடுத்த ஆண்டு Toronto நகரம் எதிர்கொள்ளவிருக்கும் $1.1 பில்லியன் பற்றாக்குறையைச் சமாளிக்க, மாகாண,  மத்திய அரசுகளுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட நிதி தீர்வை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இம்முறை நகரசபை உறுப்பினர்களாக இரண்டு தமிழர்கள் தெரிவாகினர்.

தவிரவும் நகர சபைக்கு தெரிவான எழு புதிய உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் Olivia Chow சபை அமர்வுகளுக்கு வரவேற்றார்.

முதலாவது நாள் அமர்வின் போது புதிய சபாநாயகராக Spadina-Fort York  தொகுதி நகரசபை உறுப்பினர் Ausma Malik தெரிவானார்.

Don Valley North தொகுதி உறுப்பினர் Shelley Carroll துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related posts

Quebecகில் ஒரே அதிகாரப்பூர்வ மொழி French: புதிய மசோதா

Gaya Raja

Ontarioவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிக்கிறேன்: Peel சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Loh

Lankathas Pathmanathan

இந்தியப் பிரதமர் கனடா வருகை: Mark Carney அறிவித்தார்!

Lankathas Pathmanathan

Leave a Comment