அமெரிக்காவுடன் பரஸ்பரப் பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கனடாவுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா விரும்பவில்லை என்றால் கனடாவுக்கு வேறு பல முக்கியப் பணிகள் உள்ளதாகவும் Mark Carney கூறினார்.
கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உடன்படவில்லை என்றால் அமெரிக்காவைச் சாராமல் உலகின் பிற நாடுகளுடன் வர்த்தகத்தைத் தீவிரமாக பல்வகைப்படுத்தும் பாதையில் கனடா தொடர்ந்து முன்னேறும் என பிரதமர் Mark Carney திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான தனது 9 நாள் வர்த்தகப் பயணத்தை நிறைவு செய்யும் தருவாயில், சீனாவிலிருந்து Dealbook உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக Mark Carney உரையாற்றினார்.
சீனாவில் APEC உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை புதன்கிழமை (18) Mark Carney சந்தித்த நிலையில் இந்தக் கருத்தை அவர் கூறினார்.
Donald Trump உடனான தனது சந்திப்பு நேரடியான உரையாடலாக இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க திருப்புமுனை எதுவும் ஏற்படவில்லை எனவும் Mark Carney தெரிவித்தார்.
தனது ஆசியப் பயணத்தின் போது ஒரே நாளில் Philippines, 11 நாடுகளைக் கொண்ட ASEAN கூட்டமைப்புடன் $6 trillion சந்தை மதிப்புள்ள இரண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் Mark Carney எட்டியுள்ளார்.
அதேவேளையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கனடா இறுதி செய்யும் தருவாயில் உள்ளதாகவும் பிரதமர் Mark Carney அறிவித்துள்ளார்.
