November 18, 2026
தேசியம்
செய்திகள்

APEC மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்த கனடிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி!

சீனாவில் APEC உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்.

கனடியப் பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump  ஆகியோர் புதன்கிழமை (18) நேரில் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இரு நாட்டின் தலைவர்களும் சுமார் 20 நிமிடங்கள் சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

சீனாவின் Shenzhen நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

உச்சிமாநாட்டின் தனி நிகழ்வாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கனடிய தரப்பில் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், தலைமை அதிகாரி Marc-André Blanchard  ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்கத் தரப்பில் ஜனாதிபதியுடன் வெளியுறவுச் செயலர் Marco Rubio, வர்த்தகச் செயலர் Howard Lutnick, வர்த்தக பிரதிநிதி Jamieson Greer, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி Stephen Miller ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்துத் தலைவர்கள் ஆலோசித்தனர்.

சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வாழ்வாதாரச் செலவுகளைக் குறைப்பது, கனடாவின் இறையாண்மை, கலாச்சாரத்திற்கு முழு மதிப்பளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த July மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் Mark Carney, சீனாவுடன் கனடா வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு முதன்மையான கவலையாக இல்லை என தெரிவித்தார்.

தவிரவும் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா வர்த்தக ஆலோசகர் Peter Navarro விடுத்திருந்த கடுமையான விமர்சனங்களை Mark Carney நிராகரித்தார்.

சீனாவுடனான வர்த்தக விரிவாக்கத்தில் தேசிய பாதுகாப்பு, அமெரிக்காவின் எதிர்வினைகளை கருத்தில் கொண்டு தகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Qatar சென்றடைந்தார் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment