Scarborough–Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினராக நீதன் சான் மீண்டும் பதவியேற்றார்.
தனது புதிய பதவி காலத்திற்கான சத்திய பிரமாணத்தை அவர் வியாழக்கிழமை (12) ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற Toronto மாநகராட்சித் தேர்தலில் Scarborough–Rouge Park – Ward 25 தொகுதியில் தமிழ்-கனடியரான நீதான் சான் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் நீதன் சான் 15,727 வாக்குகளைப் (44.8%) பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் தொடரும் தனது பதவிக்கான சத்திய பிரமாணத்தை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவரது பதவியேற்பு நிகழ்வில் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, அதற்குப் பின்னரும் தனக்கு தொகுதி மக்களின் நலன்களுக்காக பணியாற்ற தயாராகவும் முழு உத்வேகத்துடனும் உள்ளதாக அவர் தனது பதவியேற்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Toronto மாநகர சபையின் 2026–2030 புதிய பதவி காலம் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது.
இந்த நிலையில், புதிய சபையின் முதல் சம்பிரதாயபூர்வ அமர்வு புதன்கிழமை (18) நடைபெறவுள்ளது.
