January 1, 2027-க்குள் கனடாவும் அமெரிக்காவும் ஒரு முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடா – அமெரிக்கா இடையே திரைமறைவில் நிலவி வந்த கடுமையான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில் இந்த இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் வாய்ப்புகள் குறித்து Pete Hoekstra நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் எல்லையோர மாநிலங்களில் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சில பின்னடைவுகள் Donald Trump எடுக்கும் இறுதி முடிவுகளில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு அதிகாரிகளும் திரைமறைவில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், புதிய ஆண்டின் ஆரம்பமான January 1-ஆம் திகதிக்குள் இரு தலைவர்களும் ஒரு சுமுகமான வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கு மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கணித்துள்ளார்.
