கனடாவின் வேலையற்றோர் விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை அடைந்தது.
கனடாவின் வேலையற்றோர் விகிதம் October மாதம் 6.7 சதவீதமாக அதிகரித்தது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (06) இந்தத் தரவை வெளியிட்டது.
September மாதம் 6.5 சதவீதமாக இருந்த வேலையற்றோர் விகிதம் October மாதம் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத புதிய உச்ச நிலையாகும்.
இறுதியாக இந்த நிலையை விட வேலையற்றோர் விகிதம் அதிகமாக இருந்தது கடந்த April மாதமாகும் என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.
புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, October மாதத்தில் மட்டும் கனடிய பொருளாதாரம் நிகர அடிப்படையில் 4,700 வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது.
இதன் மூலம், இந்த ஆண்டில் நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாக இழக்கப்பட்ட நிகர வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 46,000 ஆ உயர்ந்துள்ளது.
இந்தத் தொடர் வேலைவாய்ப்பு வீழ்ச்சியானது, கனடாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்க வர்த்தக வரியினால் ஏற்பட்டுள்ள தொழில்துறை முடக்கம், பெருநிறுவனங்களின் புதிய வேலைவாய்ப்பு சுருக்கம் ஆகியவையே இத்தகைய மாபெரும் வேலை இழப்புகளுக்கு முதன்மைக் காரணங்களாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் Mark Carney அரசாங்கம் இந்த வாரம் சமர்ப்பித்த புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு மத்தியில் புதிய வேலையற்றோர் விகித அறிவித்தல் வெளியானது.
கனடிய தொழிற்சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் அடைந்த மாபெரும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு முற்றிலும் முரணாக, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவது எண்களின் அடிப்படையில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், கனடியப் பொருளாதாரம் மாதாந்திர சராசரி அடிப்படையில் 4,590 வேலை வாய்ப்புகளை இழந்து வரலாறு காணாத பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்கு முற்றிலும் முரணாக, கடந்த ஆண்டில் கனடிய பொருளாதாரம் மாதாந்திர சராசரி அடிப்படையில் 17,606 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி நிலையான வளர்ச்சியை கொண்டிருந்தது.
அதற்கு முந்தைய 2024 ஆம் ஆண்டில், கனடியத் தொழிலாளர் சந்தை மாதாந்திர சராசரி அடிப்படையில் 33,675 புதிய வேலைவாய்ப்புகளை அதிகரித்தது.
