தேசியம்
செய்திகள்

ஆறு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது Conservative கட்சி!

விரைவில் நடைபெறவுள்ள ஆறு மத்திய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை Conservative கட்சி வெளியிட்டுள்ளது.

Ontario மாகாணத்தின் Brantford-Brant South தொகுதியில் Kevin Davis, Scarborough North தொகுதியில் Dameon Halstead, Quebec மாகாணத்தின் Laurier-Sainte-Marie தொகுதியில் Mathier Fournier, Rosemont-La Petite-Patrie தொகுதியில் Osmar Llanos Martinez, Saint-Hyacinthe-Bagot-Acton தொகுதியில் Luc Brodeur-Jourdain, Saskatchewan மாகாணத்தின் Yorkton-Melville தொகுதியில் Nelson Pohl ஆகியோர் Conservative கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பொருளாதாரச் சுமையைக் குறைத்தல், கடுமையான சட்டங்கள், குடிவரவு கட்டுப்பாடு என முக்கிய கொள்கைகளுக்காக தமது வேட்பாளர்கள போட்டியிடுவார்கள் என Conservative கட்சியின் ஊடகத் தொடர்பு இயக்குநர் Sarah Fischer கூறினார்.

Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தின் கொள்கைகளால் கனடியர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், அதற்கு மாற்றாக ஒரு சிறந்த திட்டத்தை தெரிவு செய்ய Conservative கட்சி இந்த இடைத்தேர்தல் மூலம் ஒரு தெளிவான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் December மாதம் 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆறு தொகுதிகளில் மூன்று Quebec மாகாணத்திலும், இரண்டு Ontario மாகாணத்திலும், ஒன்று Saskatchewan மாகாணத்திலும் அமைந்துள்ளன.

Québec மாகாணத்தின் Saint-Hyacinthe-Bagot-Acton, Rosemont-La Petite-Patrie,Laurier-Sainte-Marie என மூன்று தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இவை முறையே Bloc Québécois, NDP, Liberal கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளாகும்.

Ontario மாகாணத்தில் Scarborough North, Brantford-Brant South ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை முறையே Liberal, Conservative கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளாகும்.

Saskatchewan மாகாணத்தில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த Yorkton-Melville  தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மையைக் கொண்டுள்ள Liberal கட்சிக்கு, தங்களது பலத்தை அதிகரிக்க இந்த இடைத் தேர்தல்கள் ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

தற்போது நாடாளுமன்றத்தில் ஆளும் Liberal கட்சி 173 இடங்களுடன் மிக மெல்லிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

இந்த ஆறு தொகுதிகளில் Liberal கட்சி தோல்வியடைந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்ற நிலை உள்ளது.

இருந்தபோதிலும் இதில் பெறும் வெற்றிகள் நாடாளுமன்றத்தில் Mark Carney தலைமையிலான அரசின் பிடியை மேலும் வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் தங்கத்திற்கு அமெரிக்காவை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்டித்த Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment