Ontario, Quebec, Saskatchewan மாகாணங்களில் வெற்றிடமாகியுள்ள ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் Mark Carney இந்த இடைத் தேர்தல் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தத் தேர்தல்கள் எதிர்வரும் December 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆறு தொகுதிகளில் மூன்று Quebec மாகாணத்திலும், இரண்டு Ontario மாகாணத்திலும், ஒன்று Saskatchewan மாகாணத்திலும் அமைந்துள்ளன.
Québec மாகாணத்தின் Saint-Hyacinthe-Bagot-Acton, Rosemont-La Petite-Patrie,Laurier-Sainte-Marie என மூன்று தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இவை முறையே Bloc Québécois, NDP, Liberal கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளாகும்.
Ontario மாகாணத்தில் Scarborough North, Brantford-Brant South ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை முறையே Liberal, Conservative கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளாகும்.
Saskatchewan மாகாணத்தில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த Yorkton-Melville தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மையைக் கொண்டுள்ள Liberal கட்சிக்கு, தங்களது பலத்தை அதிகரிக்க இந்த இடைத் தேர்தல்கள் ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
தற்போது நாடாளுமன்றத்தில் ஆளும் Liberal கட்சி 173 இடங்களுடன் மிக மெல்லிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
இந்த ஆறு தொகுதிகளில் Liberal கட்சி தோல்வியடைந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்ற நிலை உள்ளது.
இருந்தபோதிலும் இதில் பெறும் வெற்றிகள் நாடாளுமன்றத்தில் Mark Carney தலைமையிலான அரசின் பிடியை மேலும் வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தீவிரமாக அறிவித்து வருகின்றன.
