தேசியம்
செய்திகள்

மந்தமடைந்துள்ள Ontario பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் புதிய உத்தி!

Ontario மாகாண அரசின் புதிய இலையுதிர்கால நிதியறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

மாகாணத்தின் தற்போதைய நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி குறித்த இலையுதிர் கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் Peter Bethlenfalvy சமர்ப்பிக்கிறார்.

வியாழக்கிழமை (29) மதியம் சபை அமர்வில் இந்த இலையுதிர்கால நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி வர்த்தக வரிகளால் மாகாணத்தின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள சூழலில், தற்போதைய நிதியாண்டுக்கான பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025-26 நிதியாண்டைமாகாணம் $13 பில்லியன் பற்றாக்குறையுடன் நிறைவு செய்தது.

தற்போதைய அமெரிக்க வர்த்தக போரினால் இந்த ஆண்டின் பற்றாக்குறை மேலும் அதிகமாகி, வசந்தகால நிதி அறிக்கையில் கணிக்கப்பட்ட $13.8 பில்லியன் என்ற உச்சத்தை எட்டும் எனப் புதிய தரவுகள் காட்டுகின்றன.

இன்றைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் இத்தகைய நிதி ஒதுக்கீடுகள் அவசியமாகின்றன என Peter Bethlenfalvy தெரிவித்தார்.

Related posts

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gaya Raja

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment