Spain அதிவேக புகையிரத விபத்தில் (High-Speed Rail Crash) 6 கனடியர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் காணாமல் போயுள்ள மற்றுமொரு கனடியரின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள கனடியரைக் கண்டுபிடிப்பதற்காக உள்ளூர் மீட்புப் படையினருடன் இணைந்து கனடிய அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை அதிகார பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Spain நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணித்த இந்த அதிவேக புகையிரதம், தடம் புரண்டு மற்றொரு புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் குறைந்தது 68 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கனடிய பிரதமர் Mark Carney இரங்கல் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட கனடியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்துத் தூதரக உதவிகளையும் கனடிய தூதரகம் விரைந்து வழங்கி வருவதாக அவர் கூறினார்.
