Alberta மாகாண முதல்வர் Danielle Smith மாகாணம் தழுவிய அளவில் அடுத்த மாதம் கொண்டு வரவுள்ள முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த தங்களது நிலைப்பாட்டை வெளியிட கனடாவின் பிற மாகாண முதல்வர்கள் மறுத்து மௌனம் காத்து வருகின்றனர்.
October 19 அன்று நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் Alberta மக்கள் வாக்களிக்க உள்ள கேள்விகள் கனடா அரசியலமைப்பையே மாற்றியமைக்கும் அதிரடிச் சீர்திருத்தங்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது Alberta மக்கள் பரிசீலிக்க வேண்டிய விடயம் என ஏனைய மாகாண முதல்வர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் தங்களது நேரடிப் பதிலை அளிக்க Saskatchewan, Ontario மாகாண முதல்வர்கள் மறுத்தனர்.
