British Columbia மாகாண Conservative கட்சித் தலைவர் Kerry-Lynne Findlay பதவி விலகினார்.
Conservative கட்சியில் நீடித்து வந்த உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சித் தலைவர் Kerry-Lynne Findlay தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்த பதவி விலகல் அறிவித்தல் ஞாயிற்றுக்கிழமை (20) வெளியானது.
கடந்த சில வாரங்களாக கட்சியின் முக்கிய சட்டசபை உறுப்பினர்களும், கட்சித் தலைவரின் முதன்மைப் பணியாளரும் தலைமைத்துவத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியை விட்டு வெளியேறினர்.
பதவி விலகிய பலரும், Kerry-Lynne Findla -க்கு Alberta பிரிவினைவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பே தங்களின் அதிருப்திக்கு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த திடீர் பதவி விலகல், B.C. மாகாண அரசியலிலும், Conservative கட்சிக்குள்ளும் ஒரு பெரும் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதவி விலகலை தொடர்ந்து, Conservative கட்சி இடைக்காலத் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து, மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உட்கட்சிப் பூசல்களுக்கு பின்னர், கட்சி மீண்டும் பிளவுபடாமல் இருக்க தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எஞ்சியிருக்கும் Conservative உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
