தேசியம்
செய்திகள்

மீண்டும் நான்கு வார காலம் முடக்கப்படும் Ontario !

Ontario மாகாண அரசாங்கம் மீண்டும் நான்கு வார கால முழு முடக்கம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.

Ontario மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். ’Emergency brake’ என அழைக்கப்படும் இந்த முடக்கம் மாகாணத்தில் அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது.

April மாதம் 3ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த மாகாண ரீதியான முடக்கம் அமலுக்கு வரவுள்ளது. மாகாணத்தின் 34 பொது சுகாதார பிராந்தியங்களும் இந்த நான்கு வார கால முடக்கத்தை எதிர்கொள்ளும் என முதல்வர் Ford கூறினார். தற்போது Ontario எதிர்கொள்ளும் மூன்றாவது அலை புதிய அச்சுறுத்துலுடனான தொற்று எனவும் இது வேகமாக பரவுகிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்

இந்த நான்கு வார கால முடக்க காலத்தில் பாடசாலைகளும் குழந்தை பராமரிப்பு மையங்களும் திறந்திருக்கும். அதேவேளை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கான April விடுமுறை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு மாகாணத்தின் அறிவித்தலில் உள்ளாக்கப் படவில்லை. ஆனால் அத்தியாவசிய காரணங்களைத் தவிர மாகாணத்தின் குடியிருப்பாளர்கள் தங்கள் பயணங்களை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Ontario மாகாண அரசாங்கத்தின் நான்கு வார கால முழு முடக்கம் குறித்த அறிவித்தலை காலம் கடந்த நகர்வு என புதிய ஜனநாயகக் கட்சித் தலைவி Andrea Horwath தெரிவித்தார். இது இந்த அரசாங்கத்தின் தாமதமான பதில் நடவடிக்கை எனவும் அவர் விமர்சித்தார்.

Related posts

ஐந்து மாதங்களில் 17 மில்லியன் கனடியர்கள் Omicron தொற்றால் பாதிப்பு!

Lankathas Pathmanathan

போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுங்கள்: உக்ரைன் வேண்டுகோள்

Lankathas Pathmanathan

முன்னாள் Mississauga நகர முதல்வருக்கு அரச முறை இறுதிச்சடங்கு

Lankathas Pathmanathan

Leave a Comment