Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Larry Brock பதவி விலகினார்.
Brantford-Brant South தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய Larry Brock தனது பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre நாடாளுமன்றக் குழுவிலிருந்து விலகும் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.
இந்த பதவி விலகல் மூலம் Conservative கட்சி வரலாற்றுப் பின்னடைவை சந்தித்துள்ளது.
கனடா முழுவதும் தற்போது வெற்றிடமான ஆறாவது நாடாளுமன்றத் தொகுதியாக Brantford-Brant South தொகுதி அமைகிறது.
ஏற்கனவே நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் Conservative கட்சியில் இருந்து விலகி ஆளும் Liberal அரசில் தங்களை இணைந்து கொண்டனர்.
Richard Martel என்ற Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த கோடைக் காலத்தில் மேல் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
தனது வழக்கறிஞர் பணிக்கு மீண்டும் திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறி Larry Brock தனது பதவி விலகல் முடிவை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இந்த பதவி விலகலை தொடர்ந்து இவர் பிரதிநிதித்துவப்படுத்திய , Ontario மாகாணத்தின் Brantford-Brant South தொகுதியில் வரும் மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தங்களது கட்சியின் பாரம்பரியக் கோட்டையான இந்தத் தொகுதியில் தங்களின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, Pierre Poilievre இந்த வார இறுதியில் Brantford நகரில் பிரமாண்ட அரசியல் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
