Brampton வாகன தொழிற்சாலையை இராணுவ வாகன நிறுவனத்திற்கு விற்க Stellantis முடிவு செய்துள்ளது.
பிரபல சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனமான Stellantis இந்த முடிவை எடுத்துள்ளது.
மூடி உள்ள தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலையை, கனடாவின் புகழ் பெற்ற இராணுவ கவச வாகன தயாரிப்பு நிறுவனமான Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முடிவை UNIFOR தொழிற்சங்கம் வன்மையாக மறுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (11) வெளியாகியுள்ள இந்த அதிரடி அறிவிப்பால், கனடிய வாகன தொழிலாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் வெளியாகியுள்ளது.
இதன் எதிரொலியாக, Stellantis நிறுவனத்துடன் நடத்தி வந்த புதிய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை கனடிய தொழிலாளர் தொழிற்சங்கமான UNIFOR உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
2023-ஆம் ஆண்டு முதல் இந்த Brampton தொழிற்சாலை எவ்வித செயல்பாடுகளும் இன்றி முடங்கி உள்ளது.
இந்தத் தொழிற்சாலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த நகர்வு அவசியமானது என Stellantis கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Trevor Longley தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தொழிற்சாலை மூடப்பட்ட போது, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
