September 11, 2026
தேசியம்
செய்திகள்

அடுத்த வாரம் முதல் petrol விலை குறைகிறது?

கனடா முழுவதும் அடுத்த வாரம் முதல் petrol விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.

பருவகால மாற்றங்களும், மலிவான குளிர்கால எரிபொருள் கலவையும் (Winter Gasoline Blend) சந்தைக்கு வருவதே இதற்கு காரணியாக குறிப்பிடப்படுகிறது.

September 16 முதல் petrol விலை litre ஒன்றுக்கு 5 முதல் 20 சதங்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.

இருப்பினும், மத்திய கிழக்கில் தொடரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக இந்த விலை வீழ்ச்சி முழுமையாக நீடிக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

கனடாவில் தற்போது ஒரு litre petrol சராசரியாக $1.77 ஆக உள்ளது.

இது கடந்த வாரத்தின் $1.75 என்ற நிலையைவிட அதிகம் என்பதும், கடந்த ஆண்டின் $1.42 விலையை விட மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்

Gaya Raja

தேர்தல், வெற்றி தோல்விகளை ஆராய பிரச்சார மதிப்பாய்வு : NDP தலைவர் Singh

Gaya Raja

தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட Ontarioவில் வேறு விதிகளை எதிர்கொள்வார்கள்

Gaya Raja

Leave a Comment