Ontario அறிவியல் மையத்தில் ஒட்டுமொத்த அறிவியல் துறையை மாகாண அரசு கலைத்துள்ளது.
இதன் எதிரொலியாக புகழ்பெற்ற Ontario அறிவியல் மையம் (Ontario Science Centre) தனது ஒட்டுமொத்த அறிவியல் துறை உட்பட 30 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
வியாழக்கிழமை (10) வெளியான இந்த அதிரடி அறிவிப்பின்படி, 30 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் முழுமையான அறிவியல் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் அடங்குவர்.
Ontario மாகாண அரசின் தற்போதைய உள்கட்டமைப்பு திட்டங்கள், அறிவியல் மையத்தின் இடமாற்றக் கொள்கைகளுக்கு மத்தியில் இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
