தேசியம்
செய்திகள்

மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!

கனேடிய குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், தாங்களோ அல்லது தங்கள் வீட்டில் உள்ள ஒருவரோ பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடியர்களில் 37 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

August 1ஆம் திகதி முதல் August 3ஆம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் இருந்து 1,000 பேர் பங்கேற்றனர்.

இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் ஐம்பத்தைந்து சதவீதம் பேர், தொற்றின் பதில் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் கையாண்ட விதத்தில் திருப்தி அடைந்ததாக தெரிவித்தனர்.

Related posts

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களில் மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment