தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

Ontario மாகாண சபை அமர்வுகள் திங்கட்கிழமை (08) மீண்டும் ஆரம்பமாகின.

செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் சிம்மாசன உரையை தொடர்ந்து மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் திங்களன்று சட்டசபை மீண்டும் கூடியது.

இந்த அமர்வில் Ted Arnott மீண்டும் சபாநாயகராக தெரிவானார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சபாநாயகராக பணியாற்றிய Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினரான இவர் மீண்டும் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Doug Ford தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை செவ்வாய் அன்று நிகழவுள்ளது.

கோடை காலக் கூட்டத்தொடரின் போது சட்டமன்றம் சுமார் ஐந்து வாரங்கள் செயல்படும் என முதல்வர் Ford ஏற்கனவே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை சட்டமன்றத்திற்கு வெளியே, பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் முதல்வர் Fordடின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டங்களை முன்னெடுத்தனர்.

Related posts

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

மூன்று புதிய Senatorகள் பிரதமரினால் நியமனம்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!