September 12, 2026
தேசியம்
செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Olivia Chow

Toronto நகர முதல்வர் Olivia Chow தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார்.

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவியை வெற்றி பெறும் எண்ணத்திலான Olivia Chow-வின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், உள்ளூர் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் தமிழரான நகைச்சுவை கலைஞர் சுந்தர் V உள்ளிட்ட பிரபல கனடிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் பல முக்கிய ஆளுமைகள் Olivia Chow-வுடன் பணியாற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய நகர முதல்வர் Olivia Chow, Toronto  நகருடனான தனது வாழ்நாள் பிணைப்பை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொண்டார்.

தான் நகர முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னர் நகரில் இருந்த அவலங்களையும், தனது நிர்வாகம் கொண்டு வந்த மாற்றங்களையும் அவர் தனது உரையில் பட்டியலிட்டார்.

அண்மைய கருத்துக் கணிப்புகளின் படி, Toronto வாக்காளர்கள் மத்தியில் தற்போதைய நகர முதல்வரின் வரி கொள்கைகள் குறித்து  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் களத்தில் Olivia Chow தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இறுதியாக வெளியான கருத்து கணிப்பு Olivia Chow-வின் ஆதரவை 50 சதவீதமாக குறிப்பிடுகிறது.

அவரது முக்கிய அரசியல் எதிர்ப்பாளர்கள் Brad Bradford 39 சதவீதம், Chris Alexander 11 சதவீதம் என ஆதரவை கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள தேர்தலில் மொத்தம் 53 அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Related posts

கனடாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி?

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Ottawa Pride அணிவகுப்பில் இருந்து விலகும் Liberal கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment