கனடா – அமெரிக்கா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு கனடாவின் பிடிவாதப் போக்கு காரணம் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்துள்ளார்.
இறுதி கட்டத்தை எட்டிய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து கனடா திடீரென விலகியது பொருளாதார ரீதியாக எந்த அர்த்தமும் இல்லாத ஒன்று என அவர் விமர்சித்துள்ளார்.
கனடா விதித்த எதிர் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக, 5 புதிய நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump செவ்வாய்க்கிழமை (08) கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், இருதரப்பு வர்த்தக உறவுகளில் பரஸ்பர சமநிலையை மீண்டும் நிலைநாட்டவும் Donald Trump திட்டமிட்டுள்ளதாக Jamieson Greer தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை கடந்த மாதம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இரு நாடுகளும் விதித்த வரிகள் அமுலுக்கு வந்தன.
கனடாவின் எதிர் வரிகள் செவ்வாய் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த நிலையில், கனடியர்கள் கடுமையான காலங்களை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய பிரதமர் Mark Carney தனது உரை ஒன்றில் எச்சரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
