தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்?

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை litre ஒன்றுக்கு 7 சதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன ஓட்டுநர்கள் ஞாயிற்றுக் கிழமைக்குள் (30) எரிபொருளுக்கு மேலதிக செலவை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறன்று எரிபொருள் விலை litre ஒன்றுக்கு 7 சதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று (28) எரிபொருள் விலை மூன்று சதம் உயர்ந்து, litre ஒன்றுக்கு சராசரியாக 176.9 சதம் என்ற அளவில் நிலை கொண்டது.

சனிக்கிழமை (29) எரிபொருள் விலை மேலும் இரண்டு சதம் அதிகரிக்கும் எனவும், அதைத் தொடர்ந்து ஞாயிறன்று ஐந்து சதம் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி விலை அதிகரிப்பு தொழிலாளர் தின வார இறுதியில் ஏற்படவுள்ள விலை அதிகரிப்புகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர் தின வார இறுதியில் எரிபொருளின் விலை 1.90 வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

இறுதி நேரத்தில் அமெரிக்கா மேலதிக நிபந்தனைகளை விதித்ததை ஏற்றுக் கொண்ட Donald Trump?

Lankathas Pathmanathan

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

மந்த நிலைக்குள் சரியும் கனடிய பொருளாதாரம்?

Lankathas Pathmanathan

Leave a Comment