North York நகரில் Toronto காவல்துறையினர் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சனிக்கிழமை (22) மதியம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
“சேதமடைந்த வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி ஓட்டப்படுவதாக” வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
அந்த வாகனம் ஒரு விபத்தில் ஈடுபட்டதுடன், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக காவல்துறையினர் கூறினர்.
வாகன ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இதில் காவல்துறையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மாகாண சிறப்பு விசாரணைப் பிரிவு இந்த சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து குறைந்தது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
