கனடிய விண்வெளி வீரர் Jeremy Hansen 2026 CNE கண்காட்சியை ஆரம்பித்து வைக்கிறார்.
CNE கண்காட்சி தனது 18 நாள் பயணத்தை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க உள்ள நிலையில், நிலவைச் சுற்றி பறந்த முதல் கனடியர் நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வெள்ளி காலை 10 மணிக்கு Princes’ Gates பகுதியில் நடைபெறும் CNE கண்காட்சியின், 147-வது நிகழ்வை Jeremy Hansen அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
“கனடாவின் கண்காட்சியான CNE-யின் 2026-ஆம் ஆண்டு நிகழ்வை Jeremy Hansen ஆரம்பித்து வைப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என CNE-யின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Holland தெரிவித்தார்.
இவருடன் ஆரம்ப நிகழ்வில் மத்திய அமைச்சர் Julie Dabrusin, Spadina-Harbourfront நாடாளுமன்ற உறுப்பினர் Chi Nguyen, Toronto நகர துணை முதல்வர் Ausma Malik ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர் Jeremy Hansen பங்கேற்பாளர்களுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் உள்ளார்.
கனடிய விண்வெளி வீரர் Jeremy Hansen, கடந்த April மாதத்தில் சுமார் 10 நாட்கள் நிலவைச் சுற்றி வந்த நான்கு பேர் கொண்ட Artemis II குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.
CNE August 21 முதல் September 7 வரை Exhibition மைதானத்தில் நடைபெறுகிறது.
