Pierre Poilievre-ரின் தலைமை குறித்து Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்க நேரிடும் எனக் கவலை கொண்டுள்ள Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், Pierre Poilievre-ரின் தலைமைத்துவத்தையும், பிரதமர் Mark Carney-யைத் தோற்கடிக்கும் அவரது திறனையும் தனிப்பட்ட முறையில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
அடுத்த பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும்போது Pierre Poilievre தொடர்ந்து கட்சிக்குத் தலைமை தாங்குவார் என தாங்கள் நம்பவில்லை எனவும் அவர்களில் சிலர் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் 17 Conservative கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் இந்த விடயம் குறித்து CTV News பேசியுள்ளது.
Conservative கட்சியின் சவால்கள், உட்கட்சி விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு அவர்கள் அனைவருக்கும் அடையாளம் வெளியிடப்படாது என்ற உறுதி வழங்கப்பட்டது.
பிரதமர் Mark Carney-க்கு “வெளிப்படையான போட்டியாளர் எவரும் Conservative கட்சியில் இல்லை” என்ற அண்மைய கருத்துக் கணிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவப்பட்டது.
CTV News பேசிய Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் இந்தக் கருத்துக் கணிப்பை ஏற்றுக் கொண்டனர்.
கனடாவின் மேற்கு பகுதிகளில், குறிப்பாக Alberta மாகாணத்தில், Pierre Poilievre தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும், பொதுத் தேர்தலில் எந்தவொரு Conservative கட்சித் தலைவரும் Mark Carney-யைத் தோற்கடிப்பார் என்பது குறித்து அவர்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளனர்.
பாரம்பரிய Conservative வாக்காளர்கள் சிலர் Mark Carney-யையும் அவரது தலைமையையும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், Ontario மாகாணத்தை ஒரு சவாலாக சுட்டிக்காட்டினர்.
Ontario மாகாணத்தின் Brantford இடைத் தேர்தலை, Conservative கட்சிக்கான ஒரு முக்கிய சோதனை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர்ணித்தனர்.
2008-ஆம் ஆண்டு முதல் Conservative கட்சியின் வசம் இருந்து வரும் இந்தத் தொகுதியை கட்சியினால் தக்கவைக்க முடியாவிட்டால், Pierre Poilievre தலைமைக்குக் கடும் ஆபத்து ஏற்படும் எனவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
இந்தச் சூழல் 2024-இல் Toronto-St. Paul தொகுதியில் Liberal கட்சியினர் சந்தித்த தோல்வியுடன் ஒப்பிடப்படுகிறது.
LIberal கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் Justin Trudeau மீதான அழுத்தத்தை அதிகரித்த ஒரு திருப்பு முனையாகவே அந்தத் தோல்வி பரவலாக கருதப்படுகிறது.
Atlantic பிராந்தியத்தில் கட்சியின் ஆதரவு நிலை “மிக மோசமாக சரிந்து விட்டதாக” அந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
