Toronto நகரசபை தேர்தலில் நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் மீண்டும் போட்டியிடுகிறார்.
Scarborough Southwest தொகுதியின் நகர சபை உறுப்பினரான இவர், மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அடுத்த தேர்தலுக்கான வேட்பு மனுவை அவர் வெள்ளிக்கிழமை (07) தாக்கல் செய்தார்.
பார்த்தி கந்தவேள் Ontario மாகாண காவல்துறை (OPP) விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
OPP பார்த்தி கந்தவேள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற போதிலும், இது தொடர்பான விவரங்களை அல்லது புதிய தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.
May 10 அன்று, மாகாணக் காவல்துறையின் விசாரணைக்குத் தான் உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இது தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் பார்த்தி கந்தவேள் கூறினார்.
இந்த விசாரணையில் பார்த்தி கந்தவேளுக்கு எதிராக இதுவரை எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இதில் Toronto நகர சபையின் 20-வது வட்டாரத்தில் போட்டியிட தமிழரான பார்த்தி கந்தவேள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலாவது தமிழர் இவராவார்.
இதுவரை இந்தத் தொகுதியில் மொத்தம் ஒன்பது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக பார்த்தி கந்தவேள் 2023 இடைத் தேர்தலில் தெரிவானார்.
இந்த நிலையில் பார்த்தி கந்தவேள் மீண்டும் தனது நகரசபை உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
