September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய தமிழ் சிறுமி உலக சாதனை

கனடிய தமிழ் சிறுமி Guinness உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

9 வயதான திஸ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் இந்த உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

July 11 அன்று, ‘தொட்டு உணர்ந்து தீர்க்கும் புதிர் கனசதுரம்’ (Tactile Puzzle Cube) பிரிவில் Guinness உலக சாதனைக்கான தனது முயற்சியை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கனடாவின் Brampton நகரிலும் Hong Kong நாட்டிலும் ஒரே நேரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு Rubik’s Cubes-களைத் தீர்க்கும் உலகளாவிய முயற்சியில் 449 பேர் பங்கேற்றதன் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டது.

தனது உறுதிப்பாடு, கவனம், கடின உழைப்பின் மூலம் இந்தச் சிறப்பு மைல்கல்லை எட்டி, உலக சாதனைப் பட்டியலில் தனக்கென ஓர் இடத்தை திஸ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் பிடித்தார்.

நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் இவர் கண் கட்டிய நிலையில் Rubik கனசதுரம் சீர்படுத்தும் பன்னாட்டு முயற்சியில் பங்கேற்று Guinness உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையில் பங்கேற்ற Brampton நகர அணியின் மிக இளைய பெண் போட்டியாளர் என்ற பெருமையை திஸ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் தனதாக்கினார்.

Related posts

British Columbia மாகாணத்தில் திடீர் தேர்தல் அறிவிப்பு: October 24-ல் வாக்குப்பதிவு!

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

Venezuela-விற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராகும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment