FIFA உலகக் கோப்பை தொடரின் தாக்கம் இந்தப் போட்டி முடிந்த பிறகு Toronto நகரில் நிலைத்திருக்கும் என நகர முதல்வர் தெரிவித்தார்.
Toronto மைதானத்தில் நடைபெற்ற ஆறு போட்டிகளைத் தாண்டியும் நீடிக்கும் வகையிலான பலன்களை, FIFA உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெற்ற நகரமாக Toronto இருந்த காலம் வழங்கியுள்ளது என நகர முதல்வர் Olivia Chow கூறுகிறார்.
உலகக் கோப்பையை நடத்துவது “ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு” என திங்கட்கிழமை (20) நடைபெற்ற போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் Olivia Chow தெரிவித்தார்.
இந்த நிலையில் உலகக் கோப்பையின் Toronto நகரம் மீதான பொருளாதாரத் தாக்கம் குறித்த இறுதி அறிக்கைகள் வெளியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என நகர நிர்வாகி Paul Johnson தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
