வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நம்பிக்கையுடன் British Colombia முதல்வர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணம் அடுத்த பத்தாண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தை இருமடங்காக்கும் மாகாணத்தின் இலக்கின் ஒரு பகுதியாகும் என முதல்வர் David Eby கூறினார்.
ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான இது போன்ற பயணங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்தும் நோக்கத்துடன் சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக, முதல்வர் David Eby சனிக்கிழமை (27) ஊடகங்களிடம் பேசினார்.
அமெரிக்காவிற்கு வெளியே, தற்போது உள்ள அளவை விட எங்கள் சர்வதேச வர்த்தகத்தை இருமடங்காக அதிகரிக்க விரும்புகிறோம் என David Eby கூறினார்.
தானும் போக்குவரத்துத் துறை அமைச்சசரும் சீனாவில் Beijing, Shanghai, Wenzhouர் ஆகிய நகரங்களில் சந்திப்புகளை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறினார்.
சீனாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான இந்த வாய்ப்பை பிரதமர் Mark Carney சாதகமாக்கியுள்ளார் எனவும் David Eby சுட்டிக்காட்டினார்.
