September 30, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 1-ஆம் திகதி காலக்கெடுவுக்குள் முடிவடையாத நிலை ஏற்படலாம்?

அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் August 1-ஆம் திகதி காலக்கெடுவுக்குள் முடிவடையாத நிலை ஏற்படலாம் என பிரதமர் Mark Carney எச்சரித்தார்.

தனது அமைச்சரவையுடன் புதன்கிழமை (30) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை பிரதமர் அறிவித்தார்.

தொடரும் அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகளை சிக்கலானவை, விரிவானவை, ஆக்கபூர்வமானவை என Mark Carney விபரித்தார்.

பல்வேறு வகையான விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த உரையாடல்கள் நிகழ்வதாக தெரிவித்த பிரதமர், அவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் (01) கனடா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் 35 சதவீத வரிகளை விதிக்கவுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கனடியர்களுக்கான சிறந்த ஒப்பந்தத்தை கனடா நாடுகிறது என கூறிய பிரதமர் Mark Carney, அது அடையும் வரை பேச்சுவார்த்தைகள் தொடரும் என கூறினார்.

இந்த இலக்கை அடையும் வகையில் கனடா-அமெரிக்க வர்த்தகத்திற்கு பொறுப்பான அமைச்சர் Dominic LeBlanc மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பார் எனவும் Mark Carney தெரிவித்தார்.

Related posts

இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Lankathas Pathmanathan

Ontario மாகாண முதல்வரின் ஒப்புதல் மதிப்பீடு குறைந்தது

Lankathas Pathmanathan

October மாதத்தின் பின்னர் Ontarioவில் முதல் முறையாக COVID மரணங்கள் இல்லை

Gaya Raja

Leave a Comment