தேசியம்
செய்திகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மிகப்பெரிய நாடு ஈரான்: Mark Carney குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மிகப்பெரிய நாடு ஈரான் என கனடிய பிரதமர் Mark Carney குற்றம் சாட்டினார்.

செவ்வாய்க்கிழமை (16) France நாட்டில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் இருந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் Mark Carney இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்த வரவை தான் பார்த்ததாகவும் கனடிய பிரதமர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் ஒரு நியாயமான கால அளவைக் கொண்டது என Mark Carney விவரித்தார்.

யுத்தத்தை  முடிவுக்கு கொண்டு வர தற்காலிக உடன்பாடு எட்டியுள்ளதாக அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் “பயனுள்ளது” என Mark Carney கூறினார்.

“இது (ஒப்பந்தம்) என் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது” என கூறிய Mark Carney, இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் கூறினார்.

இது ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்பதை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை அமைக்கிறது, லெபனான் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கான அடித்தளத்தையும் இது அமைக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் Mark Carney தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஈரானும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தன.

இது யுத்த நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கிறது.

Related posts

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

ஏழாவது நாளாக தொடரும் பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

தந்தையானார் NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment