September 13, 2026
தேசியம்
செய்திகள்

பல திட்ட ஒப்புதல்களை விரைவுபடுத்த புதிய சட்டத்தை இயற்றும் பிரதமர்?

பல திட்ட ஒப்புதல்களை விரைவுபடுத்த பிரதமர் Mark Carney புதிய சட்டத்தை இயற்ற திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

Mark Carney அரசாங்கம் அனைத்து எரிசக்தி, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்தும் ஒரு சட்டத்தை விரைவில் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சட்டத்தின் நோக்கம், இந்த முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒழுங்குமுறை முடிவு, ஒப்புதல் செயல்முறையை இரண்டு ஆண்டுகளாக குறைப்பதாகும்.

இது மத்திய Liberal கட்சியினரால் முன்னர் வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் Mark Carney அரசாங்கம் நிறைவேற்றிய தற்போதைய முக்கிய திட்டங்கள் சட்டத்தை விட, இந்த சீர்திருத்தங்கள் இன்னும் பரவலாக பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஒரு மில்லியன் வீடுகள் கட்டப்படும்: O’Toole உறுதி !

Gaya Raja

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிராக வழக்கு விசாரணை அடுத்த வருடம் தொடரும்

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment