September 13, 2026
தேசியம்
செய்திகள்

Markham நகர தேர்தலில் இரண்டாவது தமிழர் வேட்புமனு தாக்கல்!

Markham நகரசபை தேர்தலில் இரண்டாவது தமிழர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

இதில் Markham நகரசபையின் 5-ஆம் வட்டார தேர்தலில் போட்டியிட தமிழரான தாமிரா ரஜிகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலாவது தமிழர் இவராவார்.

தாமிரா ரஜிகரன் தேர்தல் அரசியலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகரசபை தேர்தலில் இந்தத் தொகுதியில்தமிழரான ஸ்ரீ சிவசுப்ரமணியம் போட்டியிட்டு 1,372 வாக்குகளை பெற்றிருந்தார்.

2018 தேர்தலில் இந்தத் தொகுதியில் தமிழர்களான ஸ்ரீ சிவசுப்ரமணியம் (682 வாக்குகள்), ஜெரேமியா விஜேயரட்ணம் (491 வாக்குகள்) ஆகியோர் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Lisbon நகர streetcar விபத்தில் இரண்டு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்?

Lankathas Pathmanathan

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment