தேசியம்
செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

2026-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யுமாறு கனடியர்கள் கோரப்படுகின்றனர்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான படிவங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

May 12-ஆம் திகதிக்குள் இந்த படிவத்தை திருப்பி அனுப்பாதவர்களை புள்ளி விபரத் திணைக்களம் தொடர்பு கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

May மாத நடுப்பகுதிக்குள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பூர்த்தி செய்யாத குடும்பங்களுக்கு, கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பும்.

தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளதை உறுதி செய்வதற்கு, தொலைபேசி அழைப்புகள், நேரடிச் சந்திப்புகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவது கட்டாயமாகும்.

அவ்வாறு செய்யத் தவறினால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Delta விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment