தேசியம்
செய்திகள்

Markham நகரசபை தேர்தலில் கிள்ளி செல்லையா வேட்புமனு தாக்கல்

Markham நகரசபை தேர்தலில் முதலாவது தமிழர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

இதில் Markham நகரசபையின் 7-ஆம் வட்டார தேர்தலில் போட்டியிட தமிழரான கிள்ளி செல்லையா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளான வெள்ளி காலை கிள்ளி செல்லையா தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

2018 நகரசபைத் தேர்தலில் Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்தில்  கிள்ளி செல்லையா போட்டியிட்டிருந்தார்.

5 தமிழர்கள் உட்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அவர் 1,961 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தைப்  பெற்றார்.

கடந்த வருடம் இதே தொகுதியில் நடைபெற்ற நகரசபை இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்களில் ஒருவராக போட்டியிட்ட கிள்ளி செல்லையா 2,098 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப்  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Toronto Maple Leafs

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Gaya Raja

மீண்டும் அரசாங்கத்தில் இணையும் Han Dong?

Lankathas Pathmanathan

Leave a Comment